அமெரிக்காவில் மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணை அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள லின்கால்னை பகுதியில் வசித்து வரும் ஜோசிப் பராசா (24) எனும் இளைஞர் மயக்கத்தில் இருந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த காட்சிகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அந்த இளைஞர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த இளம்பெண் ஜோசிப் தன்னை போதை மருந்துகளை கொடுத்து மயக்கமடைய செய்தார்.
அதன் பிறகு தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் ஜோசிப்பை சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கைது செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அத்துமீறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவும் செய்துள்ளனர்.