சென்னையில் ஓடும் ரயிலில் ஆர்பிஎப் பெண் காவலரை கத்தியால் குத்திய நபரை எழும்பூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8:45 மணியளவில் சென்னை கடற்கரை நிலையிலிருந்து செங்கல்பட்டு வரை நோக்கிச் செல்லக்கூடிய மின்சார ரயில் ஆனது கடற்கரை ரயில் நிலையத்தில் புறப்பட்டது. 9 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் பெட்டிகளில் மத்தியில் இருக்கக்கூடிய மகளிருக்கான பெட்டியில் பெண் ஆர்பிஎப் காவாலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வண்டி புறப்பட்டு சில வினாடிகளில் அந்த பெட்டியில் எறிய ஒரு நபரை பார்த்த ஆர்பிஎப் பெண் காவலரான ஆஷிபா,
இது பெண்களுக்கான பெட்டி. இதில் ஆண்கள் ஏறக்கூடாது என ஒரு விஷயத்தை பகிர்ந்த போது அவர் உடனடியாக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் காவலரின் நெஞ்சு மற்றும் கழுத்து பகுதியில் குத்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே அந்த அடையாளம் தெரியாத நபர் யார் ? ஆர்பிஎப் பெண் காவலரை கத்தியால் குத்திய நபர் யார் ? என்பது குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தபோது அந்த சந்தேகத்தின் பேரில் பூக்கடை பகுதியைச் சேர்ந்த நபரை அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஆர்பிஎப் காவலரிடம் நேரடியாக அழைத்துச் சென்று இந்த நபர் தான் இது போன்ற செயல் ஈடுபட்டாரா ? என்பது குறித்து நேரடியாக விசாரணை நடத்தியதில் பாதிக்கப்பட்ட பெண் ஆர்பிஎப் காவாலரான ஆசிபா இந்த நபர்தான் என்னை கத்தியால் குத்திய நபர் என்று சொன்னதை எடுத்து, உடனடி அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடைமுறைகள் போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.