போர்வெல் எந்திர லாரியிலிருந்த 2 குழாய்களைப் திருட முயற்சி செய்த வாலிபரை நிறுவனத்தின் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுரோடு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் போர்வெல் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரியும் திவாகர் என்பவருடன் சேர்ந்து கம்பெனி அலுவலகத்தின் அருகில் இருக்கும் வராண்டாவில் துவங்கியுள்ளனர். அப்போது அலுவலகத்தின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த போர்வெல் இந்திரன் லாரியில் இருந்த துளை போட பயன்படுத்துகின்ற 2 குழாய்களை மர்ம நபர்கள் திருடி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து பிரகாஷ் மற்றும் திவாகர் ஆகிய இருவரும் பின்னால் துரத்திச் சென்று அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை விசாரணை செய்த போது அவர் சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த இரண்டு குழாய்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.