புத்தாண்டு பண்டிகை கொண்டாட நண்பர் பணம் தராத காரணத்தால் அவரை கத்தியால் வெட்டிய நபரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் தெருவில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்மணி என்று ஒரு நண்பர் உள்ளார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் பொருட்டு கேக் வாங்குவதற்காக ரூபாய் 200-ஐ தமிழ்மணி கவுதமிடம் கேட்டுள்ளார். ஆனால் தமிழ் மணிக்கு கௌதம் பணம் கொடுக்கவில்லை. இதனையடுத்து நண்பர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
மேலும் தமிழ்மணி கவுதமிடம் சண்டையிட்டதோடு மட்டுமில்லாமல், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதன் பின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென கவுதமின் இடது கையில் வெட்டினார். இதனால் காயமடைந்த கவுதம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கௌதம் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து தமிழ் மணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.