கொடுத்த நகையை திருப்பி தராததால் நிலத் தரகரை கொல்ல முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சந்தவேலூர் மேட்டு தெருவில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலத் தரகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய நண்பர் காமராஜர் பகுதியில் வசிக்கும் சிவராஜிடம் அவசர தேவைக்காக அய்யப்பனை 5 பவுன் தங்க நகையை வாங்கியுள்ளார். அதன்பின் சிவராஜ் பலமுறை கேட்டும் கொடுக்காத காரணத்தினால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அய்யப்பன் இம்மாவட்டத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க நகை வாங்கிக் கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஓட்டி வந்து கொண்டிருந்த சிவராஜ் அய்யப்பன் மீது வேண்டுமென்றே மோதி விபத்து ஏற்படுத்தி, பின் ஆம்புலன்ஸில் வைத்திருந்த கட்டையால் அய்யப்பனை வலது கை மற்றும் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அய்யப்பன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மேலும் இது பற்றி அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.