Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கல்யாணம் பண்ணிக்க ஆசை…. போக்சோவில் வாலிபர் கைது… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜெம்புநாதபுரம் பகுதியில் 17 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இவரது தந்தைக்கு திருப்பூரில் வேலை இல்லாததால், சொந்த ஊருக்கு தனது மகளை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாணவியை காணவில்லை. இதனையடுத்து அவரை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் ஜெம்புநாதபுரம் காவல்நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண் மாயமானது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் ஜீவா என்ற வாலிபர் இந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு கடத்தி சென்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த மாணவியை மீட்டதோடு, அவரை கடத்தி சென்ற ஜீவா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

Categories

Tech |