Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை ஏமாற்றி கடத்தியவர்… போக்சோவில் கைது செய்யப்பட்ட திருமணமான வாலிபர்… திருப்பூரில் பரபரப்பு…!!

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த திருமணமான வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தொட்டிய பாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டைலர் கடையை கொடுவாய்ப்பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவர் வெங்கிட்டிபாளையம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 17 வயது சிறுமியின் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி குணசேகரன் அவரை கடத்தி சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து விட்டனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியிடம் அடிக்கடி செல்போனில் குணசேகரன் பேசி வந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் தேடி வந்த போலீசார், கொடுவாய் பகுதியில் குணசேகரன் சிறுமியை தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்தனர். அதன்பின் அங்கு விரைந்து சென்ற தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி அந்த சிறுமியை மீட்டு குணசேகரனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விட்டனர். இந்த குணசேகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |