சிமெண்ட் ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள வி.கைகாட்டி பகுதியில் அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக தகர சீட்டு மற்றும் இரும்பு கம்பிகள் அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மர்ம நபர் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி விட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து சிமெண்ட் நிறுவனத்தினர் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரும்பு பொருட்களை திருடிய குற்றத்திற்காக சந்திரபாளையம் கிராமத்தில் வசிக்கும் பழனிசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.