ரியல் எஸ்டேட் அதிபரின் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் ரியல் எஸ்டேட் அதிபரான பங்க்பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 -ஆம் தேதியன்று டீக்கடையில் வைத்து பங்க்பாபுவை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இது குறித்த வழக்கானது திருவண்ணாமலை காவல் நிலையத்தில் நடைபெற்று வந்துள்ளது.
இதனை அடுத்து பங்க்பாபு கடந்த 2017 – ஆம் ஆண்டு அ.தி.மு.க. முன்னாள் செயலாளராக இருந்த கனகராஜ் என்பவரை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். அதனால் இந்தக் கொலை வழக்கு பழிக்குப்பழியாக இருந்திருக்கலாம் என்று காவல்துறையினருக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கனகராஜனின் உறவினர்கள் கூலிப்படையை ஏவி பங்க்பாபுவை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 19 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கூலிப்படையை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். தற்போது கூலிப்படையை சேர்ந்த செல்வா என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபரின் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த 20 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.