Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணனின் மூர்க்கத்தனமாக செயல்… தாயின் பரபரப்பு புகார்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தம்பியை இரும்புக் கம்பியால் அண்ணன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதியாதர் கோலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கைலாஷ், சாஜன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த இரண்டு சகோதரர்களும் லேஅவுட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது அண்ணனான சாஜனிடம் கேட்காமலேயே கைலாஷ் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து சகோதரர்கள் இருவரும் வீட்டிற்கு சென்ற பிறகு கோபத்தில் இருந்த சாஜன் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் கைலாஷை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பின் அருகில் உள்ளவர்கள் படுகாயமடைந்த கைலாஷை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பாகலூர் காவல் நிலையத்தில் நிர்யா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |