Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என் பணம் எனக்கு வேணும்… தவறை கண்டித்த கணவன்… தாய் மற்றும் மகனை சரமாரி குத்தியவர்…!!

தாய் மற்றும் மகனை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் வனிதா என்பவருக்கும் கட்டிட வேலைக்கு சென்ற போது, பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. அவ்வப்போது சுப்பிரமணியன் அனிதாவிற்கு பணம் கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த வனிதாவின் கணவர் அருள் இருவரையும் கண்டித்துள்ளார். அதன்பின் சுப்பிரமணியனுடன் பேசுவதையே வனிதா  தவிர்த்துவிட்டார். இதனால் கோபமடைந்த சுப்பிரமணி தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு வனிதாவிடம் கேட்டுள்ளார். ஆனால் வனிதா திருப்பிக் கொடுக்காத காரணத்தால் சுப்பிரமணியனுக்கும், வனிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த வனிதாவின் மகன் அருண் சுப்பிரமணியனுடன் சண்டை போட்டுள்ளார். இந்த சண்டையின் போது கோபமடைந்த சுப்பிரமணி, அருண் மற்றும் அவரது தாய் வனிதாவை  கத்தியால் சரமாரி குத்தி விட்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து மருத்துவமனையில் தாய் மற்றும் மகன் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |