Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அந்த பெண்ணை காதலிக்க கூடாது…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கைது செய்த காவல்துறையினர்…!!

காதல் விவகாரத்தை கண்டித்த கூலித் தொழிலாளியை வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமத்துவபுரத்தில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் மணிகண்டனின் உறவினர் பெண்ணை காதலித்துள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் அந்த வாலிபரை பிடித்து எச்சரித்து உள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த வாலிபரின் நண்பரான இசக்கி முத்து என்பவர் மணிகண்டனை கம்பால் தாக்கியுள்ளார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இசக்கிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |