முன்விரோதம் காரணமாக வாலிபரை இருவர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் அருள் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோருக்கும், சூர்யாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இவர்களுக்கு இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, கோபத்தில் அருள் மற்றும் சந்தோஷ்குமார் இணைந்து சூர்யாவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சூர்யா புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருள் மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.