Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்னால வரவே முடியாது… டிரைவரின் மூர்க்கத்தனமாக செயல்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

குடும்பம் நடத்த வர மறுத்த தால் லாரி டிரைவர் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் கிருஷ்ணன் என்ற லாரி டிரைவர் வசித்து வருகின்றார். இவருக்கு அரவிந்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கோபத்தில் அரவிந்தா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அரவிந்தாவை கிருஷ்ணன் அழைத்துள்ளார்.

ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த கிருஷ்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அரவிந்தாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனைவியை கத்தியால் குத்திய குற்றத்திற்காக கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |