Categories
உலக செய்திகள்

“கத்திக்குத்து தாக்குதல்!”.. படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. லண்டனில் பரபரப்பு..!!

லண்டனில் ஒரு இளைஞர் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் மக்கள் அதிகம் நடமாடக்கூடிய Oxford Circus என்ற பகுதியில் நேற்று மாலை ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் கிடந்துள்ளார். எனவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், ஆம்புலன்ஸ் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, இந்த இளைஞர் தொடர்பில் எந்த தகவலும் தெரியவில்லை. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும், அவரை பல தடவை கத்தியால் குத்திய காயம் தெரிகிறது. படு காயங்கள் ஏற்பட்டிருப்பதால் மோசமான நிலையில் இருக்கிறார். எனவே இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்கள்.

Categories

Tech |