வாலிபர்கள் இணைந்து இறைச்சி கடை உரிமையாளரை கடத்தி சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் சுந்தரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் தெருவில் நின்று கொண்டு சுந்தரபாண்டி ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் அருள் தவசி என்பவர் சுந்தரபாண்டியை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் தவசியை சுந்தரபாண்டி தனது நண்பர்களான பாண்டி, முருகன் போன்றோருடன் இணைந்து ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர்.
அதன் பிறகு அருள் தவசியை அவர்கள் சரமாரியாக அடித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுந்தரபாண்டி மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரையும் சுற்றி வளைத்தனர். அதன்பிறகு காவல்துறையினர் படுகாயமடைந்த அருள் தவசியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.