மத்திய பிரதேசத்தில் தொழிலாளி ஒருவர் ஒரே நாளில் லட்சாதிபதி ஆன சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டத்தில் சுபால் என்ற தொழிலாளி அதே பகுதியில் உள்ள வைர சுரங்கம் ஒன்றில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்துள்ளார். பணியின் போது இவருக்கு 7.5 காரட் அளவிலான மூன்று வைரக்கற்கள் கிடைத்தன. அதனை சுபால் வைர அலுவலகத்தில் உடனடியாக ஒப்படைத்தார். அதை சோதனையிட்டு ஒரிஜினல் வைரம் என்பதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அந்த வைரத்தை ஏலம் விட்டனர்.
ஏலத்தில் விற்கப்பட்ட அந்த மூன்று வைரத்திற்கான 12 சதவிகித வரி போக, மீதம் 88 சதவிகித தொகையான 35 லட்சம் ரூபாயை சுபாலுக்கு அதிகாரிகள் அளித்தனர். இத்தனை நாட்களாக ஒருநாள் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு வந்த தொழிலாளி தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி லட்சாதிபதி ஆன சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.