Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பண்ணுறதே மிகபெரிய தப்பு… இதுல ஏமாற்று வேலை… போலீசாரிடம் வசமாக சிக்கியவர்…!!

போலியான லாட்டரி சீட்டுகளை அச்சிட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வண்டி கேட் பகுதியில் மோகனூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சென்னாக்கள்புதூரில் வசித்து வரும் செல்வம் என்பதும், அவர் போலியாக லாட்டரி சீட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |