Categories
உலக செய்திகள்

“ஐயோ! என்னை காப்பாற்று”…. பதறிய காதலன்…. உதவிய காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சிகள்…!!!

இங்கிலாந்தில் விவாகரத்தான பெண், முகநூல் காதலனால் ஏற்பட்ட துயரத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய Rachel Elwell என்ற பெண் சமீபத்தில் தன் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். தனிமையில் வாடிய அவர் முகநூல் தளத்தில் ஸ்டீபன் என்ற நபருடன் அறிமுகமானார். இணையதளம் வழியாகவே இருவரும் பல மணி நேரங்கள் உரையாடினர்.

இந்நிலையில், ஒரு நாள் பணி நிமித்தமாக உக்ரைன் நாட்டிற்கு செல்வதாக ஸ்டீபன் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு சில நாட்கள் உக்ரைனிலிருந்து Rachel-உடன் பேசி வந்திருக்கிறார். இவ்வாறு இருவரும் சந்திக்காமலேயே காதலித்து வந்தனர். இந்நிலையில் ஒரு நாள் திடீரென்று ஸ்டீபன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதற்றமாக பேசியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டில் தன்னை ஒரு கும்பல் கடத்தி விட்டதாகவும், பணம் தந்தால் தான் தன்னை விடுவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பின்னணியில் அவரை சிலர் மிரட்டுவது  இவருக்கு கேட்டிருக்கிறது. மேலும் அவர் கட்டப்பட்டிருக்கும் புகைப்படமும் அனுப்பப்பட்டிருக்கிறது.

இதனால் பதறிய கேட்ட பணத்தை அனுப்பி இருக்கிறார். இவ்வாறு பல காரணங்களை கூறி ஸ்டீபன் அவரிடம் 99,000 பவுண்டுகள் வாங்கி விட்டார். அதன் பிறகு அவர் பிரிட்டன் நாட்டிற்கு வருவதாகவும், இருவரும் நேரில் சந்திக்கலாம் என்றும் சேர்ந்து வாழலாம் எனவும் கூறியிருக்கிறார்.

இதனை நம்பி, Rachel அவர் கூறிய இடத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் இவர் சென்ற முகவரியில் ஒரு பெண் இருந்துள்ளார். அங்கு ஸ்டீபன் என்று யாரும் கிடையாது என அவர் தெரிவித்துவிட்டார். இதனால் காவல்துறையினரிடம் Rachel புகார் தெரிவித்தார். காவல்துறையினர் அவரிடம் தெரிவித்த தகவல் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது ஸ்டீபன் என்னும் பெயர் கொண்ட ஒரு நபரே இல்லை. Rachel-க்கு அனுப்பப்பட்ட புகைப்படமானது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞருடையது. ஸ்டீபன் என்னும் பெயரில் ஒரு நபர் பல பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்து வந்ததாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் ஆடிப் போனார் ரேச்சல்.

அதாவது அவரிடம் பணம் இல்லாத காரணத்தால், கடன் வாங்கி தான் அந்த நபருக்கு Rachel அனுப்பி இருக்கிறார். இப்போது காதலும் இல்லை, பணமும் இல்லை என்று அதிர்ந்து போய் பரிதாபமாக நிற்கிறார் அவர்…

Categories

Tech |