செலவுக்கு பணம் தராததால் கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் ரயில்வே கிராஸ் ரோடு பகுதியில் சந்திரா என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விக்டர் ரோசாரியோ என்ற மகன் உள்ளார். இவர் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டை வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்டர் தனது தாயிடம் செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டபோது அவரது தாய் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
இதனையடுத்து தாயார் பணம் தராத காரணத்தால் மனமுடைந்த விக்டர் தனது வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து சந்திரா போளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,