Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு இது வேணும்… மகனின் ஆசையை நிராகரித்த தந்தை… நேர்ந்த துயர சம்பவம்…!!

தந்தை தனது பெயரில் வீட்டை எழுதி தர மறுத்ததால் கூலி தொழிலாளியான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜா நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவரின் முதல் மனைவியான பாப்பாவிற்கு முத்துராஜ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது தாய் பாபாவின் வீட்டில் தன் மனைவி தேன்மொழி மற்றும் மகன்கள் முகேஷ் மற்றும் தனுஷ் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவர்களின் வீட்டிற்கு அருகில் மணி தனது இரண்டாவது மனைவியான புஷ்பா மற்றும் மகன் தர்மராஜ் என்பவர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துராஜ் தான் குடியிருக்கும் ஓட்டு வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவரது தந்தை அதற்கு மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த முத்துராஜ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தேன்மொழி மற்றும் மகன் முகேஷ் முத்துராஜாவை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்துராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பரமத்தி வேலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |