மனைவி மற்றும் மகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் மேத்யூஸ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு இவர் மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்து தனது வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவியும், மகனும் இலங்கையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகனை இவரால் பார்க்க முடியாத விரக்தியில், மேத்யூஸ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் மேத்யூஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த எருமப்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.