திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் சண்டை போட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமராஜ் நகரில் ராஜதுரை என்பவர் வசித்துவருகிறார். இவர் அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தனது பெற்றோரிடம் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராஜதுரை தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.