தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓம் மேட்டுப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகளும், முரளிதரன் என்ற மகனும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வெளியூரில் வசித்து வந்துள்ளார். இவரது மகனும் முரளிதரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் முரளிதரன் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு அதற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முரளிதரன் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதன் காரணமாக சாத்தூர் நெல்லை எக்ஸ்பிரஸின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இந்த விபத்தில் முரளிதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி ரயில்வே போலீசார் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.