மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கென்பத்தாபள்ளி பகுதியில் அந்தோணிசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்தபோது, கோபத்தில் அந்தோணிசாமியின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு போய்விட்டார். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த அந்தோணிசாமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தோணிசாமிக்கு அளிக்கபட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.