மனைவியை பிரிந்த விரக்தியில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பம்மல் திருநீர்மலை சாலையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அருண் குமாருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அருண்குமார் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ் அப் மூலம் தனது மனைவிக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த அருண்குமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த சங்கர் நகர் போலீசார் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.