தங்கும் விடுதியில் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள குருராஜா தெருவில் ஜனார்த்தன ராஜா என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் வேலை செய்து தற்போது தனது குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி மனைவியும். சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகன் சித்தார்த் கோயம்புத்தூரில் பிளஸ் டூ படிக்கும் காரணத்தால் ஜனநார்தனன் தனது மனைவி மற்றும் மகனுடன் கோயம்புத்தூரில் தங்கியிருந்தார். இந்நிலையில் இவர்கள் மூவரும் ராஜபாளையத்துக்கு வந்து அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இதனையடுத்து ஜனார்த்தனன் தனது நண்பரிடம் தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து அவரது நண்பர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு அந்த இடத்திற்கு விரைந்தனர். அங்கு சென்று போலீசார் கதவை திறந்து பார்த்தபோது கலாவதி இறந்த நிலையிலும், ஜனார்த்தன ராஜா மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் உயிருக்கு போராடிய நிலையிலும் இருந்தனர்.
இதனையடுத்து போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் தந்தை-மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அமோனியம் சல்பேட் என்ற விஷ மருந்தை அந்த மூன்று பேரும் சாப்பிட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட அறையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தனர்.
அந்த கடிதத்தில் நாங்கள் கடவுளிடம் செல்கிறோம் என்றும் எங்களுடைய செல்போன்களையும் லேப்டாப் மற்றும் உடல்களையும் உறவினரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதோடு தங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராஜபாளையம் வடக்கு போலீசார் அவரது உறவினரிடம் விசாரித்து வருகின்றனர். பொங்கல் விடுமுறையில் விடுதியில் அறை எடுத்து தங்கி குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.