Categories
உலக செய்திகள்

அம்மா மேல இவ்வளவு பாசமா…? வாலிபரின் புதிய சிந்தனை… பயனடையும் பொதுமக்கள்… குவியும் பாராட்டுகள்…!!

தனது தாயார் மீது உள்ள பாசத்தில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஒரு இணையதளத்தை உருவாக்கிய இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக ஹியூஜ் மா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் கொரோனா தடுப்பூசியை தனது தாய்க்கு செலுத்த வேண்டும் என முடிவு செய்தார். ஆனால் தடுப்பூசி போட வேண்டும் என்றால் அமெரிக்காவில் இணையதளத்தில் முன்னரே அப்பாயின்மென்ட் பெறுவது என்பது கட்டாயமான ஒன்றாகும். இதனால் அரசு இணையதளத்தில் அப்பாயின்மென்ட் பெறுவதற்காக பல்வேறு முயற்சி செய்தும் அரசு போர்டல் சரியாக வேலை செய்யாத காரணத்தால் அவர் குழப்பம் அடைந்தார். அதன்பின் அவர் பல இணையதளங்களில் முயற்சி செய்தும் புதிதாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என பல பக்கங்களுக்கு அது சென்று கொண்டிருந்ததால், அது அவருக்கு மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது அம்மாவுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்று முடிவெடுத்த ஹியூஜ் மா இதற்கு வேறு எந்த வழி இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது தன்னை போல பிறரும் கஷ்டப்படுவார்கள் என்பதை உணர்ந்த அவர் இலவச இணைய தளத்தை உருவாக்க வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் விளைவாக டர்போவேக்ஸ் என்ற இலவச இணைய தளத்தை அவர் உருவாக்கிவிட்டார். இந்த இணையதளத்தை சுமார் இரண்டே வாரத்தில் 50 டாலர்கள் செலவில் உருவாக்கிவிட்டார். இந்த இணையதளம் மூலம் நியூயார்க் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் பயன் அடைந்துள்ளனர். மேலும் ட்விட்டரில் அப்பாயின்ட்மெண்ட் குறித்த லைவ் அப்டேட்களும் அளிக்கப்படுகிறது. இவர் தனது தாயார் மீது வைத்திருந்த அதீத அன்பின் காரணமாக உருவாக்கிய இந்த இணையத்தளமானது தற்போது பல மக்களுக்கு பயன் அளிக்கிறது.

Categories

Tech |