பெல்ஜியத்தில் ரயில் வரும் சமயத்தில் ஒரு பெண்ணை ஒருவர் தண்டவாளத்தில் தள்ளி விட்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெல்ஜியத்தில் உள்ள பிரஸல்ஸ் என்னும் நகரத்தின் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது, நடைமேடையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை அவரின் பின்புறமிருந்து ஒரு நபர் ரயில் வந்துகொண்டிருந்த சமயத்தில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார்.
(⚠️Vidéo choc)
Tentative de meurtre dans la station de métro Rogier à Bruxelles ce vendredi vers 19h40. pic.twitter.com/dT0ag5qEFu— Infos Bruxelles🇧🇪 (@Bruxelles_City) January 14, 2022
அதனை, எதிர்பாராத அந்த பெண் நிலைகுலைந்து தண்டவாளத்தில் விழுந்து விட்டார். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கும். அடுத்த நொடியில் அந்த பெண்ணிற்கு அருகே மெட்ரோ ரயில் வந்து நின்றது. நல்லவேளையாக அந்த ரயிலின் அவசர கால பிரேக்குகள் உடனடியாக வேலை செய்ததால் அந்த பெண்ணிற்கு அருகில் வந்து ரயில் நின்று விட்டது.
அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் அந்த பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் எதற்காக அந்த பெண்ணை தள்ளி விட்டார்? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.