கடன் தொந்தரவினால் கட்டிட மேஸ்திரி நாக்கை அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌபாக்கியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் புதிதாக கட்டிய வீட்டிற்காக முருகேசன் பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை முருகேசனால் திருப்பி செலுத்த இயலவில்லை.
மேலும் கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் இருந்த முருகேசன் தனது நாக்கை அறுத்துக் கொண்டு வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற குடும்பத்தினர் முருகேசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.