Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நகை பட்டறை உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் ரயில் நிலையம் அருகில் இருக்கும் தண்டவாளத்தில் ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் மார்த்தாண்டம் பகுதியில் வசித்த முத்து கணேஷ் என்பது தெரியவந்துள்ளது.

இவர் சொந்தமாக நகை பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் முத்து கணேஷ் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து கணேஷ் தனது வீட்டை விட்டு வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |