Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது… அரங்கேறிய சம்பவம்… தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த வெளிமாநில தொழிலாளி பணியின்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சித்தம்பலத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு லலித்ஓரான் என்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில்  இவர் 6 அடி உயரமுள்ள எந்திரத்தில் நின்று தொழிற்சாலையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது, கால் தவறி கீழே விழுந்து விட்டார்.

இதனையடுத்து பலத்த காயமடைந்த நிலையில் இவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடன் பணிபுரியும் தொழிலாளர்கள் கொண்டு சென்றனர். ஆனால்  மருத்துவமனையில் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் லலித்ஓரான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும்  இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |