கண்மாயில் இருந்து அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் அயன் கொல்லங்கொண்டான் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் 60 வயது மிக்க முதியவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவர் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.