வயலில் உழுது கொண்டிருக்கும் போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொண்ட குப்பம் பகுதியில் ரவி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கொண்டகுப்பம் பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்தில் உழவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் எதிர்பாராதவிதமாக தலைகீழாக கவிழ்ந்து விட்டது. இதனால் ரவியின் மீது விழுந்ததால், அதன் பாரத்தை தாங்க முடியாத ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் விரைந்து சென்று ரவியின் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.