Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு வந்தவர்… எதிர்பாராமல் நடந்த துயர சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனது உறவினரை பார்க்க வந்தவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வரட்டனபள்ளி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பெங்களூரு விஜய நகரில் வசித்து வரும் பத்மநாபன் என்பவர் வந்துள்ளார். இவர் அப்பகுதியில் நடந்த எருதுவிடும் விழாவை பார்த்துக் கொண்டிருந்த போது, வேகமாக ஓடி வந்த காளை பத்மநாபனை முட்டித் தள்ளியது.

இந்நிலையில் மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறானது கீழே விழுந்த பத்மநாபனின் காலில் சிக்கி கொண்டது. இதனால் அவரை இழுத்து சென்று மாடு சிறிது தூரம் ஓடியது. அதன் பின் அருகில் இருந்தவர்கள் பத்மநாபனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

Categories

Tech |