Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… என்ன பண்ணியும் சரியாகல… கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கம் கிராமத்தில் சுப்பிரமணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுப்பிரமணி விரக்தியில் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஏற்காடு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |