வலிப்பு நோய் ஏற்பட்டதால் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள அம்பிகாபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லுடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்துள்ளது. இதற்காக வளநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் நின்றுகொண்டிருந்த செல்வதற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.