வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காட்டூரில் பிரபாகரன் என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் வனக்காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொம்புதூக்கி அம்மன் கோவில் பகுதியில் அந்தியூர் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பிரபாகரன் அங்கு சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக பர்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரபாகரன் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.