வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் எழிலரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் சொந்தமாக கட்டுமான தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த எழிலரசன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் எழிலரசனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி எழிலரசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் எழிலரசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.