சாலையில் உள்ள குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர்-மஞ்சூர் வெளிவட்ட சாலை ஓரமாக ஒரு குட்டையில் மழைநீர் தேங்கி கிடந்துள்ளது. இந்த குட்டையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் வாலிபர் இறந்து கிடப்பதாக ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த குட்டையில் மூழ்கி இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் அந்த வாலிபரின் விவரம் குறித்தும், அவர் எப்படி அந்த பகுதியில் இறந்து கிடந்தார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.