Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல… சோகமயமான சுற்றுலா… திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தெலுங்கானாவில் இருந்து புதுவைக்கு சுற்றுலாவுக்கு வந்த தொழிலதிபர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜதராபாத் விகாரி காலனியில் கணேஷ் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகனும், சாய்ந்தி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் புதுச்சேரிக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சுற்றுலாவுக்கு வந்திருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் அருகே உள்ள கோட்டகுப்பம் சந்திராயன் கடற்கரைக்கு தனது குடும்பத்துடன் கணேஷ்  வந்திருக்கிறார். அதன் பின் கணேஷ் அவரது மனைவி மற்றும் மகனுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென வந்த ராட்சச அலை அந்த மூன்று பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த அவரது மகள் சாய்ந்தி கத்தி கூச்சல் போட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அங்கு இருந்த மீனவர்கள் ஓடிவந்து கடலுக்குள் குதித்து அந்த மூன்று பேரையும் காப்பாற்றியுள்ளனர். இதில் கணேஷிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் புதுவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் கணேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் மனைவி மற்றும் மகன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டகுப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |