Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து… வாலிபர் செய்த செயல்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

சிலிண்டரை வெடிக்க வைத்து இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் செந்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரசாயன இன்ஜினியராக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில்குமார் கடந்த 5 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக கிருத்திகா செந்தில்குமாரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டிற்குள் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். அதன்பின் வீட்டிற்குள் செந்தில்குமார் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் செந்தில்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |