வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபாடு கிராமத்தில் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேந்திரன் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்துக் கொண்டிருக்கும் போது, சுரேந்திரன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தண்ணீரில் மூழ்கி பலியான சுரேந்திரனின் உடலை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.