Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதித்தவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு….. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆனந்த் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவருக்கு மனநலம் சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த ஆனந்த் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |