Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவ இல்லாம இருக்க முடியல…. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூலி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிங்காரத் தோப்பு பகுதியில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு அகல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அகல்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து மிகவும் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |