கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துலிங்காபுரம் பகுதியில் மணிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான மணிராஜ் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அவரது மனைவி சரஸ்வதி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
இதனையடுத்து மனைவி வெளியே சிறிது நேரத்திலேயே தனது வீட்டில் மணிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த சரஸ்வதிவச்சகாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.