மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜாகடை பகுதியில் முருகன் என்ற கூலித் தொழிலாளி வசித்துவந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது முருகன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். அதன் பின் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.