வேலை இழந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோபாலா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோபாலா சென்னையில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் 5 வருட காலமாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஒன்றரை வருடமாக வேலை இழந்த நிலையில் சுரேஷ் தனது தந்தையுடன் பூர்விக ஊரில் இருந்துள்ளார். இதனால் தனக்கு வேலை இல்லாததை எண்ணி சுரேஷ் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த சுரேஷ் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். அதன்பின் மயங்கி கிடந்த சுரேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.