Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு அவ ஓகே சொல்லல… விரக்தியில் வாலிபர் எடுத்த முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பெரவல்லூர் பகுதியில் மகேஸ்வரன் என்ற ஏ.சி மெக்கானிக் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகேஷ்வரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மகேஸ்வரனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |