வியாபாரத்தில் நஷ்டமானதால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மக்காச்சோளம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு மீனாம்பாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராஜிற்கு அவர் எதிர்பார்த்த படி வியாபாரத்தில் லாபம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்த வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
இதனை அறிந்த உறவினர்கள் உயிருக்கு போராடிய அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனாலும் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து மீனாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.